Wednesday, April 24, 2024

தமிழகத்தில் மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி – 49,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!!

Must Read

தமிழக அரசு சார்பாக தற்போது மேலும் 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அழைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 49 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 55 நிறுவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

முதலீட்டாளர்களை ஈர்க்கும் திட்டம்:

தமிழகத்தில் தொழில் முனைவோர்களையும், தொழில் நிறுவனங்களையும் வெளிநாடுகளில் இருந்து ஈர்க்க தமிழக தலைமை செயலாளர் சண்முகம் சார்பில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த உயர்மட்ட குழு கூட்டம் மாதம்தோறும் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகின்றது. கடந்த கூட்டத்தின் போது கூட 34 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொழில் தொடங்க முன்வந்தன. அதற்கு தமிழக அரசும் அனுமதி அளித்தது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த தொழில் திட்டங்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இன்று மூன்றாவது உயர்மட்ட கூட்டம் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல நிலைகளில் நிலுவையில் இருக்கும் 26 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் 25,213 கோடி மதிப்புடைய முதலீடுகளை கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள 49 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகள்:

ராம்ராஜ் ஆடைகள், துணிகள் உற்பத்தி திட்டம், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் திட்டம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்கள் தமிழகத்தில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பூர், கோவை, பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படபோவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஜ அரக்கியாக மாறிய சனம் ஷெட்டி – கதறி அழும் சுரேஷ் சக்ரவர்த்தி!! தெறிக்கும் பிக்பாஸ் ப்ரோமோ!!

கடந்த கூட்டத்தில் 34 நிறுவங்களுடன் 15 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக 23 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 5 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 55 நிறுவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தொடர்ச்சியாக பல நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளதால், கிட்டத்தட்ட 74 ஆயிரம் பெரு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பலர் வேலைகளை இழந்துள்ள நிலையில் தமிழக அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -