Tuesday, April 30, 2024

கட்டிடம் கட்ட அனுமதி பெற ‘இது’ கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!!

Must Read

தமிழகத்தில் இனி கட்டடம் கட்ட அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கபடும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதே போல் கட்டடம் கட்ட அனுமதி கேட்போரின் மனைப்பிரிவை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து தான் அனுமதி வழங்குவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

மனைப்பிரிவு சட்டம்:

தமிழகத்தில் கட்டிடம் கட்ட 2019 ஆம் ஆண்டு முதல் மனைப்பிரிவு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டு வருகின்றது. அதில், மனைப்பிரிவில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர்த்து, 10 சதவீத இடம் பொழுதுபோக்கிற்காகவும், 1 சதவீத இடத்தை பொது பயன்பாட்டிற்கும், 0.5 சதவீத இடத்தை மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த வருடம் முதல் அமலில் இருக்கும் இந்த நடைமுறையை எளிமைப்படுத்த கிரெடாய் அமைப்பினர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு தற்போது ஒரு புது அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் சில முக்கியமான அம்சங்களை குறிப்பிட்டுள்ளது. மனை கட்ட அனுமதி கேட்க இருப்பவர்கள் சிலவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கட்டிடம் கட்ட அனுமதி கேட்கும் மனைப்பிரிவை உரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வர்.
  • மனைப்பிரிவில் உள்ள சாலை, திறந்தவெளி பகுதிகளை பற்றிய விஷயங்களை உறுதி செய்ய வேண்டும். அதனை அந்தந்த துறை ஆவணங்களை உள்ளாட்சி அமைப்பிடம் வழங்க வேண்டும்.
  • அதே போல் தண்ணீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் விளக்குகளுக்கான கட்டணத்தை உள்ளாட்சி அமைப்பிடம் சரியாய் கட்டி விட வேண்டும்.
  • ஒரு மனைப்பிரிவில் அடிப்படை வசதிகள் உள்ளது உறுதியானால் மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை சரியாக பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -