கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் – சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு!!

0

தேனி மாவட்டம் சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்பிணி மனைவி கொலை:

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதனின் பின்புலத்திலும் ஒரு பெண் இருப்பாள்.சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் நடைமுறையில் நாம் காண்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது. பெண்கள் மட்டுமில்லாமல் பெண்குழந்தைகள் கூட வன்முறைக்கு ஆளாகுவது மிகவும் வேதனைக்குரியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெண்கள்,ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க எண்ணத்தால்அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

இதற்கு சான்றாக தேனி மாவட்டம் சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், அவரது மனைவி கற்பகவல்லி இருவருக்கும் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவல்லியை கடந்த 2016-ஆம் ஆண்டு சுரேஷ் கொலை செய்தார். இதனால் வயிற்றில் இருந்த கருவும் இறந்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!!

இதனால் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுரேஷ் கொலை செய்தது உறுதிபடுத்தப்பட்டது. அதனால் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷிற்கு 10000 ரூபாய் அபராதமும், சாகும் வரை தூக்கிலிடவும் தீர்ப்பு வழங்கியது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here