தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0
tn school
34 அரசு பள்ளிகளை நிரந்தரமாக மூட உத்தரவு - மாநில கல்வித்துறை திடீர் முடிவு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் முதல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் (இறுதிப்பருவம் தவிர) வரை அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். இம்முறை கொரோனா பரவலால் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆன்லைன் மற்றும் டிவி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

செப்டம்பர் 21ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் அவர்களின் விருப்பத்துடன் பெற்றோர்களின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் பாடங்கள் குறித்து தங்களது சந்தேகங்களை கேட்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலத்தில் செப் 21 முதல் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்களை திறக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனுமதி வழங்கி உள்ளார்.

minister sengottaiyan
minister sengottaiyan

முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா பரிசோதனை – ரிசல்ட் வெளியானது!!

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார். மேலும் அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதுவரை 13 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here