முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா பரிசோதனை – ரிசல்ட் வெளியானது!!

0

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள உள்ள அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரின் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது.

கொரோனா பரிசோதனை:

தமிழகத்தில் இதுவரை 4,91,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 8,231 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் தகவலாக 4,35,422 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் 14ம் தேதி (திங்கட்கிழமை) முதல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இம்முறை கொரோனா அச்சத்தால் செப். 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

kalaivanar-arangam-mount-road-chennai
kalaivanar-arangam-mount-road-chennai

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. பரிசோதனையில் கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர் அவர்களின் சோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

நீட் தேர்வு பயத்தால் மதுரை மாணவி தற்கொலை – உருக்கமான ஆடியோ பதிவு வெளியானது!!

CM Palanisamy & Deputy CM Panner Selvam
CM Palanisamy & Deputy CM Panneer Selvam

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று வரும் நிலையில், அவருக்கு சோதனையில் கொரோனா இல்லை என உறுதியாகி உள்ளது. மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here