தமிழகத்தில் ஜனவரியில் பள்ளிகள் திறப்பு?? 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கை!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை காரணமாக 5 லட்சம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் கூடியுள்ளதால் ஒவ்வொரு பள்ளிகளிலும் எத்தனை ஆசிரியர்கள் தேவை என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநகத்திற்கு தெரியப்படுத்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அச்சம்:

கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் தெளிவான முடிவிற்கு வரவில்லை. மாணவர்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய நலன் கருதி பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவு தள்ளி போய் கொண்டு இருக்கின்றது. பொது முடக்கம் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காவது பள்ளிகளை திறந்து நேரடியாக பாடங்களை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒரு பக்கம் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவு இந்த மாதத்தின் இறுதியில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, கொரோனா பரவலால் பொருளாதார ரீதியாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டதன் எதிரொலியாக 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். அடுத்த ஆண்டு பள்ளிகள் திறப்பு குறித்த உத்தரவு வெளியானால் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகள்!!

இதன் காரணமாக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இதனை சரி செய்யும் வகையில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார். அதில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் தேவையினை தெரியப்படுத்த வேண்டும் என்றும், உபரி ஆசிரியர்களின் விவரமும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியல் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்திற்கு தெரியப்படத்தப்பட்டதும் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here