கொரோனா தடுப்பூசி செலுத்தினால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது!!

0

நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகத்தில், அதிக மது பிரியர்கள் வசிக்கும் ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி போட்டு 42 நாட்களுக்கு மது அருந்துவது, கூட்டமான இடங்களுக்கு வெளியே செல்வது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என ரஷ்யா துணை பிரதமர் டிமிட்ரி ரோகேஜின் அறிவுறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி:

கொரோனா பரவல் தடுக்கும் விதமாக உலக நாடுகள் பல கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது. தற்போது அமெரிக்கா அடுத்த 24 மணி நேரத்திற்குள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலகிலேயே அதிக மது பிரியர்கள் இருக்கும் நாடு ரஷ்யா எனவும் ஆண்டுக்கு சுமார் 1.51 லிட்டர் மதுபானம் அருந்துவதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் பிரிட்டன் அரசு மக்களுக்கு தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து ரஷ்ய அரசு Sputnik V தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்கா ஊடகம் வெளியிட தகவலின்படி, ரஷ்ய தயாரிப்பான Sputnik V தடுப்பூசி மக்களுக்கு செலுத்தியபின் 42 நாட்களுக்கு பின் செயல்பட தொடங்கும் எனவும் இதை செலுத்திய பின் மது குடிக்க கூடாது எனவும் 42 நாட்களுக்கு கூட்டமான இடங்களுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!!

பொதுவாக ஒரு தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்பு, நான்கு கட்ட சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் தடுப்பூசிகளை மூன்று கட்ட சோதனைகள் மட்டுமே நடத்தி அவசரகால அனுமதி வழங்கப்படுகிறது. ரஷ்ய தடுப்பூசி நம்பமுடியாத வேகத்தில் தயாரிக்கப்பட்டதாகக் கூறும் மேற்கத்திய நிபுணர்கள், அது செயல்படும் விதத்துக்கு மாஸ்கோ ஆதாரம் எதனையும் வெளியிடவில்லை. எனவே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here