அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – டொனால்ட் டிரம்ப்!!

0
Trump
Trump

அமெரிக்கா கண்டுபிடிப்பான ஃபைசர் தடுப்பூசியை அடுத்த 24 மணிநேரத்திற்குள் மக்களுக்குள் செலுத்த உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஃபைசர் தடுப்பூசி:

உலகம் முழுக்க சுமார் 150 இடங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பல நாடுகளில் சோதனை இறுதிக்கட்டத்தில் வெற்றிகண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள ஃபைசர்,ஜெர்மனியின் பயோன்டெக் மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதில் ஃபைசர் தடுப்பூசி 95 சதவீதமும், மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் செயல்திறன்மிக்கது என்று கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இங்கிலாந்து மற்றும் பிரிட்டன் நாடுகள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு வெளியிட்ட நிலையில் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்துவந்த அமெரிக்கா அரசு தற்போது அமெரிக்கா தயாரிப்பான ஃபைசர் தடுப்பூசியை 24 மணி நேரத்தில் மக்களுக்கு செலுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகள்!!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். 9 மாதத்திலேயே பாதுகாப்பான, வீரியமிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவத்தின் சாதனை. ஏற்கெனவே அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கும் தடுப்பூசி அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வரலாற்றின் மிகப்பெரிய மைல்கல்” எனத் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here