‘பாரதி கண்ணம்மா’ ஸ்பெஷல் எபிசோடாக 3 மணிநேர தொடர் – குஷியில் ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகள் நடந்து வருகிறது. அடுத்து என்ன தான் நடக்க போகிறது என்று யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வரும் ஞாயிற்று கிழமையில் சிறப்பு தொடராக 3 மணி நேரமாக ஒளிபரப்பாகிறது.

பாரதி கண்ணம்மா சிறப்பு தொடர்

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் சதி திட்டத்தால் எப்படியோ பாரதியின் மனதை மாற்றி திருமணம் வரை கொண்டு வந்துவிட்டார். பாரதியம் வெண்பா சொல்வதை எல்லாம் நம்பி கண்ணம்மாவை தொடர்ந்து சந்தேகப்பட்டு கொண்டு தான் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியை திட்டி விட்டு கோவிலை விட்டு வெளியேறும் போது கெட்டிமேள சத்தம் கேட்டதை அடுத்து அவர்களுக்கு திருமணம் நடந்ததா?? இல்லையா?? என்பது குழப்பமாகவே உள்ளது. இன்றைய எபிசோடில் வேறு 8 வருடங்களுக்கு பிறகு என காட்டுகின்றனர்.

‘ட்ரெண்டிங்கில் ரஜினியின் பிறந்தநாள்’ – கலைகட்ட தொடங்கிய பிறந்தநாள் கொண்டாட்டம்!!

அப்பொழுது இத்தனை நாட்களில் பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை தெரிந்திருக்குமா?? மேலும் எதுவுமே தெரியாமல் மக்களும் குழம்பி போய் தான் உள்ளனர். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் சிறப்பு தொடராக 3 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது நாளை ஞாயிற்று கிழமையில் மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

இன்றைய எபிசோடிலேயே 8 வருடங்களுக்கு பிறகு என்று காட்டப்பட்ட நிலையில் இனி இந்த 3 மணி நேர சிறப்பு தொடரில் எதை காட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும் பாரதிக்கு இது பற்றிய உண்மை தெரிந்து விட்டால் அடுத்து எந்த கதையம்சத்தில் இந்த தொடர் நகர போகிறது என்பது சஸ்பென்ஸாக தான் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here