Monday, April 29, 2024

கடலூரில் விரைவில் வணிக போக்குவரத்து தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு!!

Must Read

கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆய்வு பணிகள்:

கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். அதே போல் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்று ஆய்வினை மேற்கொண்டார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார் கூடுதலாக வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

உங்க வாழ்க்கையில் இந்த விஷத்தை மட்டும் பண்ணிடாதீங்க – சாப்பாடுக்கு கூட கஷ்டம் வருமாம்!!

cm in kadalur district
cm in kadalur district

பின், 26 பயனர்களுக்கு ரூபாய் 73.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  அதே போல் 32.16 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.

முதல்வர் உரை:

பின், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கூறியதாவது “தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது வரை 300 காய்ச்சல் முகாம்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.”

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இப்படி பணிகள் தீவிரமாக நடக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தான் காரணம். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். கடலூரில் புதிய வணிக கப்பல் போக்குவரத்து தொடங்க ஆலோசனைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. விரைவில் அது செயல்பாட்டுக்கு வரும். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 687 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” இப்படியாக தனது உரையில் தெரிவித்தார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -