தமிழக சட்டமன்ற தேர்தல் – அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு மரியாதையை செலுத்தும் ஸ்டாலின்!!

0

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் இன்று மதியம் வேட்பாளர் பாட்டியலை வெளியிடவுள்ளார். இந்நிலையில் இதற்கு முன்பாக அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையை செலுத்தியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

தமிழக்தில் சட்டமன்ற தேர்தலுக்காக இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கி உள்ளது. இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். தற்போது அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தும் மற்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தும் வருகின்றனர். தற்போது தமிழகத்தில் அரசியல் களமே சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் திமுக கட்சியின் வேட்பாளர் பட்டியலை இன்று மதியம் வெளியிடவுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் திமுக தொண்டர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்துகொண்டு வருகிறார்கள். ஏற்கனவே திமுக கட்சி தங்களது கூட்டணிக்கு சுமுகமான முறையில் தொகுதிகளை பிரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதர்க்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடங்களுக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வேட்பாளரை எதிர்த்து அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் – பரபரப்பாகும் தேர்தல் களம்!!

மேலும் இந்த வேட்பாளர் பட்டியல் மதியம் 12.30 மணிக்கு ஒரே கட்டமாக வெளிவரவுள்ளது. இன்னும் சில நேரங்களில் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரவுள்ளதால் தேர்தல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here