தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

0
minister sengottaiyan
minister sengottaiyan

கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? என்ற கேள்வி எழ ஆரமித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை. இதற்கிடையில் மத்திய அரசு அடுத்தகட்ட பொதுமுடக்கம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் திறப்பு:

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார். ஆனால் நேற்று முன்தினம் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள் திறப்பு பற்றிய முடிவு ஆலோசனைக்கு பிறகு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து, 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பெற்றோர்கள் அனுமதியுடன் மட்டும் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கலாம் என்ற அறிவிப்பு வெளியான சில தினங்களில் அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே மாணவ, மாணவியர் அனைவரும் ஆன்லைன் வகுப்பில் மட்டும்தான் கல்வி கற்க வேண்டும் என்ற சூழ்நிலையும் அமைந்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோன பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த ஏழு மாத காலமாக மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்பின் மூலம் பாடம் கற்கின்றனர். தொடர்ந்து மாணவர்கள் வகுப்பிற்கு வந்து பாடம் கற்க சாத்தியம் உள்ளதா என்பதை பற்றி அதிகாரிகளும் ஆலோசித்து வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பள்ளிப்பாடத்திட்டத்தினை குறைப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் 60% பாடத்திட்டத்தில் இருந்து தான் பொதுத் தேர்வுகளில் கேள்விகள் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here