உலகப்போரில் கூட இப்படி ஒரு ஊரடங்கு இல்லை – ராகுல் காந்தி

0
ராகுல் காந்தி உரையாடல்
ராகுல் காந்தி உரையாடல்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்றும் பல்வேறு விபரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி, தொழிலதிபர் ராஜிவ் பஜாஜுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

ராகுல் காந்தி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்நிலையில் இன்று தொழிலதிபர் ராஜிவ் பஜாஜுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை போல உலகப் போரில் கூட நடக்கவில்லை என கூறினார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

யானைக்கு பழத்தில் வெடி வைத்துக் கொன்ற கயவர்கள் – துப்புக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு..!

தற்போது மத்திய அரசு பின்வாங்கி உள்ளதாகவும், அனைத்து சுமைகளையும் மாநில அரசுகளின் மீது விட்டு விடுகின்றனர் என ராகுல் காந்தி கூறியுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு பாதிப்பு அதிகரிப்பது இந்தியாவில் தான் என தெரிவித்தார். அவருடன் கலந்துரையாடிய ராஜிவ் பஜாஜு, இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு கடுமையானது என கூறியுள்ளார். கொரோனா பரவல் அச்சத்தை மக்கள் மனதில் இருந்து போக்கி ஊக்கம் அளிக்க பிரதமர் அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here