சென்னையில் 3 மணிநேரம் – மோடியின் பயணத்திட்டம் வெளியீடு!!

0

வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக சென்னை வரவுள்ளார். சென்னை வரும் பிரதமர் மோடியின் பயணப்பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

மோடியின் சென்னை பயணம்

தமிழகத்தில் வரும் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. வரும் பிப்ரவரி 14ம் தேதி பிரதமர் சென்னை வரவுள்ளார். அரசுமுறை பயணமாக சென்னை வரும் அவர் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மோடியின் அரசியல் பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

போனி கபூர் வெளியிட்ட வலிமை படத்தின் ரிலீஸ் அப்டேட் – குஷியில் தல ரசிகர்கள்!!

பிரதமர் மோடி சென்னை வருவதற்கான பயணபட்டியல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. காலை 7.50 மணியளவில் விமானம் மூலம் டெல்லியிலிருந்து புறப்படும் பிரதமர் மோடி காலை 10.35 மணியளவில் சென்னை வந்தடைகிறார். தொடர்ந்து நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவங்கி வைக்கவுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சென்னையில் காலை 11.15 லிருந்து 12.30 வரை நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளுடன், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவாக்க பணிகளையும் துவங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி. நிகழ்ச்சிகள் எல்லாம் முடிவு பெற்றதும் மதியம் 1.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு கேரளா செல்லுகிறார். கேரளாவில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய ஆலையை திறந்து வைக்கவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here