மியான்மர் ராணுவ தலைவர்களின் சொத்துக்கள் முடக்கம் – ஜோ பைடன் அறிவிப்பு!!

0

மியான்மரில் ஆட்சியை கலைத்து அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவத்தலைவர்கள் மீது பொருளாதார தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துளார். உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றுவரும் மியான்மார் ராணுவ அரசின் மீதான இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆட்சி கவிழ்ப்பு:

மியான்மர் தேர்தலில் ஊழல் நடந்ததாக கூறி ஆட்சியை கலைத்த மியான்மார் ராணுவம், தற்போது அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் மியான்மரின் மிக முக்கிய அரசியல் தலைவர்களான ஆங் சான் சூயி, அதிபர் வின் மியின்ட் மற்றும் ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பலரும் மியன்மார் ராணுவத்தலைவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வரும் வேளையில் தற்போது அமெரிக்கா அரசு அவர்களுக்கெதிரான பொருளாதார தடையை அறிவித்துள்ளது.

‘6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்’ – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

கடந்த வியாழக்கிழமையன்று இது குறித்து பேசிய அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் “மியான்மரில் சதி வேலைகளில் ஈடுபட்டு ஆட்சியினை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ராணுவம் உடனடியாக ஆட்சியினை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மியான்மர் மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும்” என தெரிவித்துளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர் “மியன்மார் ராணுவ தலைவர்கள் அமெரிக்காவில் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை கையாள்வதற்கு தான் தடை விதித்துள்ளதாகவும், மேலும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தனது தலைமையிலான நிர்வாகத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே  வரவேற்பினை  பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here