‘6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்’ – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

1

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரைவில் டேப் வழங்கப்போடும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.

செங்கோட்டையன்:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூரில் ரூ.43 கோடி மதிப்பிலான கட்டிட பணிகள் மற்றும் சாலை பணிகளை தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். அதன்பின்பு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, விரைவில் மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி பெற்று தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் 2017-18ம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இதனை 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் அறிவித்தார். மேலும் பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்து அவர் ஓர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று நடைபெறும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை தயாராகும் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது பள்ளிகளுக்கு 98.5 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை – தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கம்!!

மத்திய அரசு சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5,500 தான் சம்பளமாக தருகிறது. ஆனால் தமிழக அரசு தான் தற்போது மாதம் ரூ.10,000 வரை சம்பளம் வழங்கி வருகிறது. மேலும் உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான காலி பணி இடங்களை விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். மேலும் மற்ற ஆசிரியர்கள் காலி இடங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here