விஜய் ஹசாரே கோப்பை – தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கம்!!

0

தற்போது அடுத்ததாக நடைபெறவிருக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடரில் தமிழக அணியில் நடராஜன் இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அவர் தமிழக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

விஜய் ஹசாரே:

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கு அடுத்ததாக பிசிசிஐ தற்போது விஜய் ஹசாரே போட்டியை நடத்த உள்ளது. இந்த போட்டி வரும் 20ம் தேதி முதல் தொடங்கி மார்ச் மாதம் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் நிறைய காலம் இல்லாத காரணத்தினால் இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை நடைபெறாது என்று பிசிசிஐ அறிவித்தது. மேலும் தற்போது நடைபெறவுள்ள விஜய் ஹசாரே தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் சில தினங்களுக்கு முன்பாக இந்த போட்டிக்கான தமிழக அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. அதில் ஆஸ்திரேலியா தொடரில் கலக்கிய நடராஜன் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனால் நடராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பிசிசிஐ அனுமதித்தால் நான் போட்டியில் பங்கேற்பேன் என்றும் நடராஜன் கூறினார். தற்போது யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடராஜன்:

தற்போது இதுகுறித்து பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செயலாளர் ராமசாமி கூறுகையில், இந்தியா கிரிக்கெட் வாரியத்திற்கு மற்றும் அணி நிர்வாகத்திற்கும் தற்போது நடராஜன் தேவைப்படுகிறார். தேசத்துக்காக விளையாடுவது தான் அனைத்து வீரரின் கடமை அதனை கருத்தில் கொண்டு தான் தமிழக அணியில் இருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கு செல்ல சொல்லி பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை – விருதுநகரில் நடந்த துயரம்!!

தற்போது அவருக்கு பதில் மாற்று வீரராக வேறு ஒருவர் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் வரும் மார்ச் 12ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் விளையாடுவதற்காக தான் நடராஜன் தற்போது தமிழக அணியில் இருந்து விளக்கப்பட்டுள்ளார் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் இங்கிலாந்து தொடரில் நடராஜன் இடம் பிடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது போல் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here