போனி கபூர் வெளியிட்ட வலிமை படத்தின் ரிலீஸ் அப்டேட் – குஷியில் தல ரசிகர்கள்!!

0

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் செய்தி வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பின் இறுதிக்கட்ட வேலைகள் பிப்ரவரி மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும் எனவும் மே மாதம் முதல் வாரத்தில் படம் வெளியிடப்படுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என அவர் தெரிவித்துளார்.

வலிமை திரைப்படம்:

அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணியில் உருவாகி வெற்றி நடை போட்ட படம் தான் நேர்கொண்ட பார்வை. இதன் பிறகு இவர்கள் இருவரும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். மறைந்த நடிகையான ஸ்ரீ தேவியின் கணவரும் பிரபல தயாரிப்பளருமான போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் சதுரங்க வேட்டை ஆகிய வெற்றிப்படங்களில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். அஜித்தின் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படம் குறித்த செய்திகளை தற்போது போனிகபூர் வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கு செல்ல சொல்லி பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை – விருதுநகரில் நடந்த துயரம்!!

முன்னதாக ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் போனி கபூர் தற்போது போர்ப்ஸ் பத்திரிகைக்கு இது குறித்து பேட்டியளித்துளார். அதில் அவர் “வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை பிப்ரவரி 15க்குள் முடிக்கவிருப்பதாகவும், ஒரு சண்டைகாட்சியை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும அதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளை விரைவில் முடித்து ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார். அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here