விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ட்விட்டர் நிர்வாகிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!!

0

தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் சர்ச்சையான கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்காத காரணத்தினால் மத்திய அரசு ட்விட்டர் நிர்வாகிகளை கைது செய்ய முடிவெடுத்துள்ளது.

ட்விட்டர்:

டெல்லியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டவர்கள் பலர் தங்களது சர்ச்சைக்குரிய கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்தியா நாட்டவர்கள் கடினமாக பதில் அளித்தும் வருகின்றனர்.இதனால் தற்போது ட்விட்டரில் கருத்து போர் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்போரின் கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசு அறிவித்தது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை தொடர்ந்து ஐடி சட்டம் 67ஏ யின் படி நோட்டிஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தனிமனித உரிமையை மீறிவிடும் நிலை ஏற்படும் என்பதால் பல கணக்குளை முடக்காமல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மட்டும் ட்விட்டர் நிறுவனம் நீக்கி வந்தது. இதனால் தற்போது ட்விட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. தற்போது இதுகுறித்து ட்விட்டர் அதிகாரிகளிடம் ஐடி செயலர் பிரகாஷ் கூறியதாவது, சர்ச்சைக்குரிய ஹாஷ்டக்குகளை பயன்படுத்துவது பத்திரிக்கை சுதந்திரம் அல்ல.

‘6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும்’ – கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

அப்படி செய்தால் அது தற்போதைய நிலைமையை மிக மோசம் ஆக்கிவிடும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை மத்திய அரசு கைது செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here