Monday, April 29, 2024

முறையாக வரி கட்டுவோர்க்கு புதிய சலுகைகள் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

Must Read

இன்று வரி செலுத்துவோர் சாசனத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.

புதிய வரி செலுத்துவோர் சாசனம்:

இன்று பிரதமர் நரேந்திர மோடி வரி செலுத்துவோருக்கான மாநாட்டில் கலந்துகொண்டு முகமற்ற மதிப்பீடு மற்றும் வரி செலுத்துவோர் சாசனம் இவை இரண்டையும் துவக்கி வைத்தார்.

கூடுதலாக, முகமற்ற முறையீட்டு சேவை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

பிரதமர் உரை:

இதனை துவக்கி வைத்துவிட்டு பிரதமர் மோடி உரை ஒன்றை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது ” நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பலமாக இருப்பவர்கள், நேர்மையான வரியை உரிய நேரத்தில் செலுத்துபவர்கள் தான். அவர்களுக்கான சாசனம் தான் இது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

prime minister modi
prime minister modi

இந்த திட்டம் ” வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவருக்கு மதிப்பளித்தல்” என்பதை கருப்பொருளாக கொண்டுள்ளது. இது நேர்மையானவர்களை பெருமை படுத்த உருவாக்கப்பட்டது ஆகும்.

பல மாற்றங்கள்:

இந்த 6 ஆண்டுகளில், நாங்கள் செய்தது பாதுகாப்பு இல்லாமல் இருந்ததை பாதுகாத்தது மற்றும் வங்கியில் இல்லாமல் இருந்தததை வங்கியில் இருக்க வைத்தல். இன்றில் இருந்து ஒரு புது பயணம் துவங்கி உள்ளது.

அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!

கடந்த சில வருடங்களில் வரி செலுத்துவதில் பல மாற்றங்கள் கொண்டு வரபட்டுள்ளன. வரி அமைச்சகம் வரி செலுத்துவோர் நலனுக்காக கார்ப்பரேட் வரியை குறைத்துள்ளது மற்றும் டிவிடெண்ட் வரியை ரத்தும் செய்துள்ளது. இந்த சாசனத்தில் விதிமுறைகளும் எளிமையாகபட்டுள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -