Wednesday, May 8, 2024

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமான பெரம்பலூர்!!

Must Read

இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பினர் என அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு “பெரம்பலூர் “

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா கண்டறியப்படவில்லை. மேலும் 2,228 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 15 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்த 45 பேருக்கும் கொரோனா நெகடிவ் என்று வந்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

corono
corono

பெரம்பலூர் மாவட்டத்தில் 21 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தின் 200 வீடுகளில் 2 படுக்கை வசதியுடன் கொரோனா வார்டு அமைத்துள்ளனர்.

முதல் மாவட்டம்

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக மாறியுள்ளது பெரம்பலூர். இங்கு 2,228 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 2,207 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட 45 பேருக்கும் நெகடிவ் என்று வந்து அவர்களும் முழுமையாக குணமடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

21 பேர் வேறு பிரச்சனை மற்றும் கொரோனாவுக்கு இதுவரை இறந்துள்ளனர். நேற்றில் இருந்து ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்று செவிலியர், மருத்துவர் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -