சுவாமி ஐயப்பன் “மாலை அணியும் முறை மற்றும் நெய் அபிஷேகம்” – கார்த்திகை மாத ஸ்பெஷல்!!

0

கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது சுவாமி ஐயப்பன் தான். மாத தொடக்கத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் மலைக்கு சென்று வழிபடுவது வழக்கம். விரதம் இருக்க தொடங்கும் பொழுது ஒரு தேங்காயில் நெய்யை ஊற்றி இருமுடி கட்டி 48 நாட்கள் பூஜை செய்து மலைக்கு எடுத்துச் சென்று வழிபடுவர்.

ஐயப்பன் அறிமுகம்:

பல வருடங்களுக்கு முன்பு இருந்து ஐயப்ப வழிபாடு என்பது கேரளாவில் மட்டும் இருந்தது வந்தது. தமிழ்நாட்டில் முதல் முறையாக ஐயப்பனின் பெருமையை “ஸ்ரீ ஐயப்பன்” என்ற நாடகத்தின் மூலம் நவாப் ராஜ மாணிக்கம் என்பவர் அறிமுகப்படுத்தினார். இதில் நமது முன்னாள் பிரபல நடிகரான நாகேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐயப்பனுக்கு விரதம் இருந்தால் மட்டும் ஏன் இவ்வளவு இடர்பாடுகள் ஏற்படுகிறது என்பது பலருக்கும் புரியாத புதிர். ஐயப்பனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் கடினமான மலை பாதைகளை தாண்டி செல்ல வேண்டும். அந்த இடர்பாடுகளை சமாளிப்பதற்கான பக்குவத்தை அடைய வேண்டும் என்பதற்காக தான் என்று கூறப்படுகிறது.

நெய் அபிஷேகம்:

சபரிமலை ஐயப்பன் 1800-ம் ஆண்டு வரை அத்தி மரத்தால் செய்யப்பட்ட “தாரு சிலை” ஆக இருந்தது. இதனால், பகதர்கள் கொண்டு செல்லப்படும் நெய்கள் அனைத்தும் நெய்தோணியில் ஊற்றப்பட்டது. ஆனால், இப்பொழுது நேரடியாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இருப்பினும், சில கேரள மக்கள் நெய்தோணியில் நெய்யை ஊற்றிவிட்டு கொஞ்சம் பிரசாதமாக வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

முதல் முறையாக ஐயப்பனுக்கு மாலை அணிபவரை கன்னிச்சாமியார் என்று கூறுவார்கள். இவர்கள், மாலை அணிந்து விரதம் இருக்கும் பொழுது மலைக்கு செல்வதற்கு முன் மூத்த சாமியார்களை அழைத்து பஜனம் பாடி, விருந்து வைத்தபின் செல்வது முறையாகும். இந்த முறையை வழக்கமாக வைத்துள்ளனர். செல்லும் வழியில் எத்தனை தடைகள் வந்தாலும் ஐயப்ப பக்கதர்கள் தலையில் கொண்டு செல்லும் இருமுடியை கீழே இறக்கிவைக்க கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here