Monday, April 29, 2024

நடிகர் தவசிக்கு உதவிய “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி – ரசிகர்கள் பெருமிதம்!!

Must Read

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல நகைச்சுவை நடிகர் தவசிக்கு நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சார்பில் இருந்து 1 லட்சம் ரூபாய் அவரது மருத்துவ செலவிற்காக வழங்கியுள்ளார்.

நடிகர் மருத்துவமனையில் அனுமதி:

தமிழில் வெளிவரும் படங்களில் கிராமத்து வேடங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு என்றுமே தனி மவுஸ் தான். அதிலும் அவரகள் நன்றாக நகைச்சுவையுடன் பேசி நடித்தால் அவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடும். அப்படி தமிழில் பல கிராமத்து நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், நடிகர் தவசி. ஜில்லா, நான் கடவுள், வீரம், சுந்தரபாண்டியன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற முன்னணி வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதிலும் குறிப்பாக “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு தந்தையாக நடித்திருப்பார். அவர் அப்போது பயன்படுத்தும் வசனங்கள், சூரியை கோர்த்துவிடும் காட்சிகள் என்று நன்றாக நடித்திருப்பார்.

இப்படியாக இருக்க கடந்த சில வருடங்களாக அவர் உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் படங்களிலும் நடிக்கவில்லை. சினிமாத்துறையினர் அல்லது அரசோ தனக்கு உதவி செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.

விஜய் சேதுபதி நிதியுதவி:

முதல் கட்டமாக அவரை தனது சூர்யா தொண்டு நிறுவனம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் எனமருத்துவரும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,வும் ஆன சரவணன் தெரிவித்து இருந்தார். அதேபோல் நடிகர் தவசியின் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதில் நடிகர் தவசி ஆள் அடையாளமே தெரியாமல் இருந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பலரும் உதவி செய்ய முன் வந்தனர். நடிகர் சூரி 20 ஆயிரம் ரூபாயும், அவருக்கு உதவி செய்யும் பணியாளர்களுக்கு 3 வேளை உணவும் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மருத்துவ செலவிற்கு 25 ரூபாய் ரொக்கமாக வழங்கியுள்ளார். இவர்களை தொடர்ந்து தற்போது “மக்கள் செல்வன்” நடிகர் விஜய் சேதுபதி அவரது மருத்துவ செலவிற்காக 1 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெருமிதத்தில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -