Thursday, May 16, 2024

8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தில் உள்ள குமரி கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 நேரத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை பொழிவு:

தமிழகத்தில் குமரி கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதனை தவிர்த்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவு இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கனமழை பதிவு:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ, பாபநாசம் பகுதியில் 14 செ.மீ, வந்தவாசியில் 11 செ.மீ, திருபுவனத்தில் 10 செ.மீ, மதுராந்தகம், மையலடி பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக விருதுநகர், ராஜபாளையம், பாளையங்கோட்டை பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மாறும் வானிலை காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  1. இன்று (17/11/2020) குமரிக்கடல், மாலத்தீவு, கேரளா கடற்கரை, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  2. நாளை (18/11/2020) மாலத்தீவு, கேரள கடற்கரை, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் கடலுக்கு குறிப்பிட்ட நாட்களில் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -