தமிழக மக்களே அலர்ட்டா இருங்க…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!!

0
சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை நிலவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (மே 14) முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். அதேபோல் இன்று (மே 14) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here