லாஸ்லியா தந்தை இறப்பை வைத்து சம்பாதிக்கும் வனிதா – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

2020 இல் நாம் பல கஷ்டமான சூழ்நிலைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். மேலும் பல இழப்புகளையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில் லாஸ்லியா அப்பா மரியநேசனின் இழப்பு பலரையும் கலங்க வைத்துள்ளது. தற்போது வனிதா லாஸ்லியாவின் நிலைமையை பற்றி பேட்டியளித்துள்ளார்.

லாஸ்லியா தந்தை இழப்பு:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரது தமிழும், அவரது அழகும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் லாஸ்லியா, கவின் காதலித்து வந்ததாகவும் கூறி வந்தனர்.  மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவருக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. பிக் பாஸ் வீட்டில் 10 வருடங்களுக்கு பிறகு அவரின் தந்தையை சந்தித்தார் லாஸ்லியா. பிக் பாஸ் வீட்டில் நடந்த காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்நிலையில் அவரின் இழப்பு பெரும் வேதனையை அளித்து வருகிறது.

அவரின் இறப்பை குறித்து வனிதா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் லாஸ்லியாவிடம் அவர் பேசியதாக கூறியிருந்தார். லாஸ்லியா மிகவும் கதறி அழுததாகவும் கூறியிருந்தார். இந்த இறப்பை தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அன்று இரவு தான் லாஸ்லியா அவரின் அப்பாவிடம் வீடியோ கால் பேசி இருக்கிறாராம். அன்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார் என்றும் கூறினார்.  இந்த வீடியோவை வெளியிட்டதால் பலரும் வனிதாவை திட்டி வருகின்றனர். இதன் மூலம் காசு சம்பாதிக்கிறீர்கள் என்றும் பேசி வருகின்றனர். இதையும் உங்கள் தொழில் கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள், என்று பலரும் கண்டவாறு கமன்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here