Saturday, May 18, 2024

சென்னை, திருவள்ளூர் உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Must Read

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்றிலிருந்து மழைபெய்து வருவதால் பணிக்கு செல்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

chennai
chennai

தாழ்வான களில் உள்ள மக்களின் வீடுகளில் உள்ளே தண்ணீர் புகுந்தது. நுங்கம்பாக்கம் பகுதியில் காலை முதல் மழைபெய்து வருவதால் முழங்கால் வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

செங்கல்பட்டு, ஈரோடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர், செந்தமிழ் நகர் மற்றும் காவனூர் ஏரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளினுள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வீட்டினுள்ளே இருக்கும் சூழல் உருவாகியது.  ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை, பாவனி, கொடுமுடி மற்றும் அந்தியூர் ஆகிய இடங்களிலும் மழையால் வீடுகளினுள் தண்ணீர் புகுந்தது.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் மற்றும் அங்குள்ள மாநகர பகுதிகளிலும் நேற்று மாலை இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழைபெய்து வந்தது. இரவு நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

coimbatore
coimbatore

இந்த மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கி கிடந்தது. மேலும் இன்று திருவள்ளூர், மயிலாடுதுறை, சேலம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

17 மாவட்டங்கள்

தமிழகத்தில் தொடர்ந்து மழைபெய்து வரும் நிலையில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக குமரிக்கடல் தொடங்கி வடதமிழகம் வரை மழைக்கு வாய்ப்பு. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

red alert
red alert

கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -