Saturday, April 27, 2024

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி – திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்ட தேர்வுத்துறை!!

Must Read

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாநிலங்களில் தேர்வினை எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதனை தற்போது தேசிய தேர்வு முகமை சரி செய்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் 2020:

கடந்த செப்டம்பர் மாதம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வில் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்று எழுதினர். கொரோனா காரணமாக எழுத முடியாத மாணவர்கள் கடந்த 17 ஆம் தேதி தேர்வினை எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளில் பல குளறுபடிகள் இருந்தன. மாநிலம் வாரியாக தேர்வினை எழுதியவர்கள், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதில் அதிகபட்சமாக பல குழப்பமான விவரங்கள் இருந்தன. மாநில அளவில் அதிக தேர்ச்சிகளை உடைய மாநிலமாக திரிபுரா இருந்தது. தேர்வு எழுதியோர் 3536 பேர் மட்டும் தான். ஆனால் தேர்ச்சி அடைந்தோர் எண்ணிக்கை 88,889 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் தான் உத்தரகாண்ட் மாநிலத்திற்கும் கூறப்பட்டு இருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எடுக்கும் அதிரடி முடிவு – கோபத்தில் ஜனார்த்தனன்!!

தேர்வினை எழுதியவர்கள் மொத்தம் 12,047 பேர் ஆனால், தேர்ச்சி அடைந்ததாக 37,301 என்று குறிப்பிட்டு இருந்தனர். இதனால் அனைவர் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது.

புதிய வெளியீடு:

இது குறித்து நீட் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் குறிப்பிட்டதாவது, பட்டியலில் தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளது, அதனால் திருத்தப்பட்ட பட்டியல் தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது திரிபுரா மாநிலத்தில் தேர்வு எழுதிய 3536 பேரில் 1738 பேர் தேர்ச்சி பெற்றதாக மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -