Friday, April 26, 2024

ஏழைகளுக்கு உணவளிக்க வருமானத்தின் ஒரு பகுதியை செலவிடும் தேநீர் விற்பனையாளர்..!!

Must Read

மதுரையை சேர்ந்த தேநீர் விற்பனையாளரான தமிழரசன் ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு உணவளிக்க தனது வருவாயில் ஒரு பகுதியை செலவிடுவது ஆச்சரியம் அளிக்கிறது.

கடினக் காலத்திலும் கருணை:

கொரோனா தொற்றுநோயால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் ஏழைகளுக்கு உதவ முன்வந்த வண்ணமும் உள்ளனர்.

tea seller
tea seller

இதற்கு ஒரு சிறந்த உதாரணம் மதுரை தேநீர் விற்பனையாளர். மதுரை அலங்கநல்லூரில் தேநீர் விற்பனையாளரான தமிழரசன், இந்த கடினமான காலங்களில் ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு உணவளிக்க தனது வருவாயில் ஒரு பகுதியை செலவிடுகிறார்.

இல்லாதவர்களுக்கு இலவசம்:

உங்களுடைய ராசிக்கு இன்றைய பலன் -Today Horoscope 24-07-2020

madurai tea shop owner Spends Part Of His Earnings To Feed Poor
madurai tea shop owner Spends Part Of His Earnings To Feed Poor

சுற்றியுள்ள கிராமங்களில் தினமும் காலையிலும் மாலையிலும் தேநீர் விற்கும் தமிழரசன், தேநீர் விற்கும் போதெல்லாம், சாலையோரத்திலும், கோவில் வாசல்களிலும் இருக்கும் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்குக்கும் இலவசமாக தேநீர் தருவதாகவும், தனது வருமானத்தில் ஒரு பகுதியை இல்லாதவர்களுக்கு மூன்று வேலையும் உணவளிக்க ஒதுக்குவாகவும் கூறப்படுகிறது.

கனவாக சொந்த தேநீர் கடை:

மேலும் அந்த பகுதியில் ஒரு சொந்த தேநீர் கடை அமைத்து, ஏழை எளியோர்கள், முதியோர்கள் போன்ற மக்களுக்கு உதவுவதே தமிழரசனின் கனவு என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடை வைக்க கடனுக்காக விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் அக்கடனுக்காக வங்கியில் வழங்குவதற்கு எந்த பிணையும் இல்லாத நிலையினால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -