மதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது? மத்திய நிதி அமைச்சர் பரபரப்பான பதில்!!!

0

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 10) மாலை உரையாற்ற உள்ளார். இதற்கிடையில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக விவரித்து வந்தார். அப்போது மதுரையில் எப்போது? எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவீர்கள் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர்,” மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளை விட மதுரையில் 150 படுக்கை வசதி கூடுதலாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் 900 படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ரூ.1977 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ.2000 அபராதம்…, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here