பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட புதிய மாஸ் திட்டம்…, இனி யாருக்கும் பயப்பட தேவையில்லை!!

0
பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட புதிய மாஸ் திட்டம்..., இனி யாருக்கும் பயப்பட தேவையில்லை!!
பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட புதிய மாஸ் திட்டம்..., இனி யாருக்கும் பயப்பட தேவையில்லை!!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக கோவை மாவட்டத்தில் தான் அதிக அளவிலான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், கோவை உயர் கல்வியின் நகரம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இங்கு உள்ள 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ” போலீஸ் அக்கா” என்ற புதிய திட்டம் ஒன்றை கடந்த ஆண்டே கோவை நகர காவல் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த போலீஸ் அக்கா திட்டத்தின் படி, கோவையில் உள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் மகளிர் காவலர் ஒருவர் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர், அந்த கல்லூரி மாணவிகளிடம் தொடர்பு கொண்டு அவர்கள் சந்திக்கும் உளவியல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறார். இந்த திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டு இடையில் நின்ற 150 மாணவிகள் மீண்டும் கல்லூரியில் சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது. இது குறித்து, தனியார் கல்லூரி ஒன்றில் பேசிய கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், யாராவது பெண்களை புகைப்படம் எடுத்து வைத்து கொண்டு மிரட்டினால் போலீஸ் அக்காவை எங்களுக்கு தெரியும் என தைரியமாக கூறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மதுரையில் 900 படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது? மத்திய நிதி அமைச்சர் பரபரப்பான பதில்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here