பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ.2000 அபராதம்…, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

0
பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ.2000 அபராதம்..., சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!
பொது இடங்களில் மாடுகள் திரிந்தால் ரூ.2000 அபராதம்..., சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கேட்பாரின்றி மாடுகள் சுற்றித் திரிகின்றனர். சாலையில் திரியும் இந்த மாடுகளால், வாகன விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து புகார் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து பொது இடங்களில் சுற்றித் திரியும் மாடுகளை உடனடியாக அதன் உரிமையாளர்கள் பிடித்து சொந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த அறிவுறுத்தலை மீறி மாடுகள் பொது இடங்களில் சுற்றித் திரிந்தால், அவற்றை மாநகராட்சி பிடித்து மாட்டு தொழுவத்தில் வைத்துக்கொள்ளும். பிடித்த மாடுகள் திருப்பி விடுவதற்கு அதன் உரிமையாளர்கள் ரூ. 2000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

உங்கள் பான் கார்டில் மாற்றம் செய்ய வேண்டுமா?? இது தான் எளிய வழி.., முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here