Tuesday, May 7, 2024

வெண்ணை திருடும் மாயக்கண்ணனுக்கு பிறந்தநாள் – எப்படி கொண்டாடலாம்??

Must Read

அனைவரும் விரும்பும் குட்டி கண்ணனுக்கு இன்று பிறந்தநாள். இந்த நாளை எப்படி கொண்டாட வேண்டும் என்பதை பற்றி சில குறிப்புக்கள்.

கிருஷ்ணா ஜெயந்தி:

இன்று இதிகாசங்களின்படி, இன்று காக்கும் கடவுள் ஆன ” ஸ்ரீ மகா விஷ்ணு” பூமியில் கண்ணனாக அவதாரம் எடுத்த நாள் இன்று. இதனை அனைத்து தரப்பு மக்களும் விமர்சையாக கொண்டாடுவர்.

lord krishna - avatar of maha vishnu
lord krishna – avatar of maha vishnu

தங்கள் வீட்டில் உள்ள குட்டி குழந்தைகளை குட்டி கண்ணன் போல் வேடமணிந்து, கண்ணனின் பாதம் வைத்து தங்கள் வீட்டுக்கு அந்த கண்ணனே வந்தது போல் மகிழ்வர்.

எப்படி கொண்டாடலாம்:

அதிகாலை எழுந்து கொள்ளுங்கள், பின் உங்கள் வீட்டில் குட்டி குழந்தையை ( வயது 3 முதல் 8 குள் ) குட்டி கண்ணனாகவோ இல்லை ராதையாகவோ வேடம் அணியவைத்து, அவர்களுக்கு பிடித்ததை செய்து கொடுங்கள்.

gokulastami
gokulastami

பச்சரிசி மாவில் அவர்கள் பிஞ்சு பாதங்களை நனைத்து, வீட்டில் தலைவாசல் படியில் இருந்து வீட்டில் இருக்கும் பூஜை அறை வரை நடக்க வையுங்கள். அது அந்த கண்ணன் உங்கள் வீட்டிற்கு வந்த சான்றாகும்.

பூஜை முறைகள்:

வீட்டில் உள்ள பூஜை அறையில், கண்ணனின் புகைப்படத்தை வைத்து குத்துவிளக்கேற்றி, வண்ண மலர்களால் அலங்கரித்து, கண்ணனுக்கு பிடித்த பதார்த்தங்கள் ஆன சீடை, வெண்ணை, முறுக்கு இனிப்பு வகைகளை படித்து கண்ணனை வணங்குங்கள்.

 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே 

கண்ணன் பாடல்கள் பாடி, அதனை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு அதனை சொல்லி கொடுங்கள்.

கண்ணன் உங்களுக்கு அனைத்தையும் கொடுப்பான்!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -