அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

0

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் திறக்கப்படும் பள்ளிகள் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் வரும் கல்வியாண்டில் பாடங்கள், தேர்வுகள் குறைப்பு உள்ளிட்ட மாற்றாங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

வெண்ணை திருடும் மாயக்கண்ணனுக்கு பிறந்தநாள் – எப்படி கொண்டாடலாம்??

இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 90 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை பணிகளை முடித்து விட்டதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் கூறியுள்ளார். இதனால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அளவு குறையும் என அவர் எச்சரித்து உள்ளார். இந்த காரணங்களை கருத்தில் கொண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க தமிழக அரசு உடனே உத்தரவிட வேண்டும் என ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here