திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக 2,500 சிறப்பு பேருந்துகள்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஏப்ரல் 23) சித்ரா பௌர்ணமி என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி இடங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 2,500 சிறப்பு பேருந்துகள் மற்றும் 6 சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த சிறப்பு பேருந்து ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் கோவிலுக்குள் ரூ.50 க்கான சிறப்பு தரிசன கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 முக்கிய வினா.., இன்று திங்கள் கிழமை, 61 நாள் கழித்து என்ன கிழமை வரும்?? விடை உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here