கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு!!

0

தற்போது கேரளா மாநிலத்தில் கொரோனாவின் பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கேரளா மாநிலத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கேரளாவில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா:

இந்தியாவில் முதன்முறையாக கடந்த ஆண்டில் கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனால் கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓர் நாளுக்கு சுமார் 5000 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் அங்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 5,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நேற்று இதுகுறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் அவர்கள் கூறியதாவது, தற்போது கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் கேரளாவில் வீரியமிக்க கொரோனா பரவுவதாக சுகாதாரத்துறை முன்பே அறிவித்திருந்தது. எனவே தற்போது மத்திய அரசு அளித்த தளர்வுகளை கேரளா அரசு தடை செய்துள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை கட்டாய முறையில் திறக்கப்பட கூடாது.

ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை – நிதியமைச்சகம் அறிக்கை!!

மேலும் அனைத்து முக்கிய மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதிக்க கூடாது. மேலும் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கோவில்கள், திருமண உட்பட நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும். மேலும் பேருந்துகள், அலுவலகங்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். தற்போது கொரோனா பரவல் அதிகரித்தால் மீண்டும் ஊரடங்கு உத்தரவிற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here