மத்திய பட்ஜெட் இன்னும் சிறிது நேரத்தில் தாக்கல் – பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்!!

0

பல வித எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மத்திய நிதி நிலை பட்ஜெட் தாக்கல் செய்ய பட இருக்கின்றது. பட்ஜெட் அறிக்கையின் நகலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசு தலைவரிடம் வழங்கினார்.

மத்திய பட்ஜெட் தாக்கல்

இந்த ஆண்டு மத்திய அமைச்சர் வழங்க இருக்கும் பட்ஜெட் அறிக்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும் பாதிப்பினை மக்கள் சந்தித்தனர். கூடுதலாக, நாட்டின் பொருளாதார நிலையம் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது.

ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை – நிதியமைச்சகம் அறிக்கை!!

நாட்டின் நிலையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உள்ளன. இதற்கு முதல் படியாக மத்திய நிதி நிலை அறிக்கை வழங்கப்பட உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு எந்த மாதிரியான அறிவிப்புகள் இடம் பெற போகின்றது என்று அறிய அனைத்து தரப்பினரும் ஆவலாக உள்ளனர்.

அமைச்சரவை ஒப்புதல்

இந்த நிதி ஆண்டிற்கான (2021 – 2022) மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி துவங்கி விட்டது. இந்த கூட்டத்தொடரில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இரு அவைகளிலும் பங்கேற்று உரை நிகழ்த்தினார். ஜனாதிபதியை சந்தித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்து பேசினார். அதற்கான நகலை ஜனாதிபதியிடம் வழங்கினார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

When Nirmala Sitharaman pulled out the Modi playbook | Deccan Herald

இன்று காலை 11 மணி அளவில் இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் உள்ளார். மத்திய பட்ஜெட்டினை தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மத்திய நிதிஅமைச்சருக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here