ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஜூலை 1ம் தேதி மேஜிக் நிகழும்.. ராகுல் காந்தி வாக்குறுதி!!

0

நாடு முழுவதும் 3 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு அண்மையில் முடிவடைந்த நிலையில், 4 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் ஏற்படுத்தி இருந்தனர். அக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீர் தீ விபத்து., இதுதான் காரணம்? அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு!!!

அதாவது வரும் ஜூலை 1ஆம் தேதி இந்தியாவிலுள்ள ஏழை குடும்ப பெண்களின் வங்கி கணக்கில் ரூபாய் 8,500 மேஜிக் போல சென்றடைந்திருக்கும். ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி அந்தத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். இப்படி மொத்தம் ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here