சட்டமன்ற சபா நாயகர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை – அதிர்ச்சியில் அரசியல் பிரமுகர்கள்!!

0

கர்நாடக மாநிலத்தில் சட்டமேலவை துணை தலைவராக திகழ்பவர் எஸ்.எல்.தர்மேகவுடா. இவர் திடிரென்று நேற்று இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அனைவரையும் அதிரவைத்தது. தற்போது அரசியல் பிரமுகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சட்டமேலவை துணை தலைவர்:

இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருக்கிறது. ஏனெனில் இந்த ஆண்டில் கொரோனாவால் பாதி பேர் உயிர் இழந்துள்ளார்கள். மேலும் தங்களது சொந்த பிரச்சனைகளால் சில பிரபலங்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இப்போதைய காலங்களில் தற்கொலை செய்வோர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது இதேபோல் ஓர் சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கர்நாடக மாநிலத்தில் சட்டமேலவை துணை தலைவராக திகழ்பவர் எஸ்.எல்.தர்மேகவுடா. இவர் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவர். கட்சியில் அடிப்படையில் இருந்து படிப்படியாக முன்னேறி வந்துள்ளார். மேலும் இவர் கடந்த 2018ம் ஆண்டு சட்ட மேல் சபையின் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நேற்று இரவு தனது இல்லத்தில் இருந்து தனக்கு ஓர் வேலை இருப்பதாக கூறி வெளியே சென்றுள்ளார். வெளியே சென்று நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் அவரது குடும்பத்தார் போலீசிடம் புகார் தெரிவவித்தனர். ஆனால் அதற்கு முன்பு அவரது மரண செய்து வந்துள்ளது.

இவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை மேற்கொண்டுள்ளார். இந்த செய்தி அனைவரையும் அதிரவைத்துள்ளது. இவரது உடல் சடலம் சிக்கமகளூரு அருகே உள்ள காட்டூர் தண்டபாலத்தில் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று அறிவித்துள்ளார்கள். மேலும் அடுத்த கட்ட விசாரணையின் போது சில தகவல்கள் வெளியகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இவரது செயல் தனக்கு வருத்தம் அளிப்பதாக தேவகவுடா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் இவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்று முன்னால் முதலமைச்சர் குமாரசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here