#INDvsAUS பாக்ஸிங் டே டெஸ்ட் – இந்திய அணி அபார வெற்றி!!

0

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் உள்ளது.

பாக்ஸிங் டே:

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டி புகழ்மிக்க பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது நினைவிருக்கும். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். விராட் கோஹ்லி இல்லாத நிலையில் இந்திய அணியை ரஹானே வழிநடத்தினார். ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் பும்ராஹ் மற்றும் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா தனது முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் கேப்டன் ரஹானே 112 ரன்களும் மற்றும் ஜடேஜா 57 ரன்களும் குவித்துள்ளனர். அதன்பின் 131 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிவந்தனர். தற்போது ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்திய அணிக்கு 70 ரன்கள் ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தனது இரண்டாவது இன்னிசை துவக்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் அகர்வால் 5 ரன்கள் மற்றும் புஜாரா 3 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தார்கள். அதன் பின் ஜோடி சேர்ந்த சுப்மங் கில் மற்றும் கேப்டன் ரஹானே பொறுப்புடன் விளையாடி அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். கில் 35, ரஹானே 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தற்போது இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. மேலும் 3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னியில் வைத்து நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here