Thursday, May 2, 2024

கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் அதிரடி ஆக்சன் மூவி – டீஸர் வெளியீடு!!

Must Read

மாஸ்டர் படத்திற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்துடன் கமல் சேர்ந்து நடிக்கும் படத்தின் தலைப்பு, கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ்:

லோகேஷ் கனகராஜ் என்பவர் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர். இவர் 2016 ஆம் ஆண்டு மாநகரம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். பின் 2019 ஆம் ஆண்டில் கைதி என்ற படத்தை இயக்கியுள்ளார் மற்றும் 2020 ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். திரையரங்கு திறந்த உடன் மாஸ்டர் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

தற்பொழுது முதல் முறையாக கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணிபுரிகிறார்கள். இது கமலின் 232 -வது படமாகும். கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தலைப்பு வெளியானது. இந்த படத்தின் தலைப்பு விக்ரம். ஏற்கனவே 1986 ஆம் ஆண்டு “விக்ரம்” என்ற தலைப்பில் படம் நடித்துள்ளார்.

மீண்டும் அதே தலைப்பை வைத்துள்ளார்கள். டிரிசரை பாக்கும் போது இது அக்சன் மூவி என்று தெரிகிறது. தற்பொழுது இந்த டைட்டில் லுக் மற்றும் டிரிசர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் தமிழ் சினிமா முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் காலி மதுப்பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்., ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!!

தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -