Sunday, May 19, 2024

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை வெளியீடு – முதலிடத்தை இழந்தது இந்தியா!!

Must Read

இந்திய அணி 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் முதலிடத்தை இழந்து இந்திய அணி இரண்டம் இடத்தை பெற்றுள்ளது.

ஐசிசி தரவரிசை:

கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை முதல் இடத்தில் இருந்து வந்த இந்திய அணி 75 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. முதலிடத்தில் 82.2 வெற்றி  ஆஸ்திரேலிய அணியும், 3வது இடத்தில் 60.8 வெற்றி சதவீதத்துடன் வைத்து இங்கிலாந்து அணியும் உள்ளது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து 50, பாகிஸ்தான் 39.5, ஸ்ரீலங்கா 33.3, வெஸ்ட் இண்டீஸ் 16.7 மற்றும் தென்னாப்பிரிக்கா 10 வெற்றி சதவீதங்களை வைத்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அக்டோபர் 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது. ஆனால் புள்ளிகளை வைத்து பார்க்கும்போது, இந்தியா 360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வெற்றி சதவீதங்களை வைத்து பார்க்கையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்யை விதிகளை ஐ.சி.சி மாற்றியுள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை வரை முதலிடத்தில் இருந்த இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. ஐ.சி.சி விதியை தொடர்ந்து இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் நடக்கப்போகும் டெஸ்ட் தொடர் முக்கியமுள்ளதாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -