மத்திய அரசு புதிய திட்டம் – தொழிலாளர்கள் குறைதீர்க்க 20 சிறப்பு மையங்கள்.!

0

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குறைதீர்க்க 20 கட்டுப்பாட்டு மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஊரடங்கு

கொரோனா நாடெங்கிலும் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 12 வரை மத்திய அரசு அமல்படுத்தி இருந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரையில் 339 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,363 பேருக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனால் இந்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Cities deserted as India launches curfew to stem coronavirus ...

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பலர் தங்களது வேலையையும் சம்பளத்தையும் இழந்துள்ளனர். பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. ஊரடங்கு தடை உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இடம்பெயர் தொழிலாளர்கள்தான்.

Centre to reward daily wagers - The Financial Express

சொந்த ஊர்களில் இருந்து வாழ்வாதாரத்தைத் தேடி இடம்பெயர்ந்து சென்று வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கே திரும்பிவிட்டனர். அவர்களில் பலருக்கு வேலை பறிபோகிவிட்டது. சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் முறைசாரா துறையைச் சேர்ந்த 40 கோடிப் பேர் வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குறைதீர்ப்பு மையங்கள்

வேலை மற்றும் சம்பளத்தை இழந்துள்ள மக்களுக்கும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் மத்திய அரசு தரப்பிலிருந்து சிறப்பு குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமை தொழிலாளர் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 குறைதீர்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

In Tiruvallur People can not cancel the meeting Request a petition ...

இங்கு கொரோனா பீதியால் வேலையை இழந்தவர்கள் சம்பளம் கிடைக்காதவர்கள் இடம்பெயர் தொழிலாளர்கள் தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வுபெறலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை வாட்ஸ் அப் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here