முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.500 அபராதம் – காவல்துறை அறிவிப்பு..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் உயிர் இழப்புகள் மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

ரூ.500 அபராதம்:

தமிழகத்தில் ஏற்கனவே கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியே வரக்கூடாது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகரத்தில் முகக்கவசம் இல்லாமல் மக்கள் வெளியே வந்தால் அனுமதி பாஸ் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் வைக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

மேலும் அவர்களுக்கு தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 179வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என காவல்துறை அறிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here