இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ் – வீட்டிலிருந்தே படிக்க ஏற்பாடு..!

0

இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படிப்பதற்கு, தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தொழில்நுட்ப மாணவர்களுக்கான ஆன்லைன் மற்றும் காணொலி விரிவுரைகள் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் முடிவு..!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் மத்திய அரசு மே 3 ஆம் தேதி வரைக்கும் ஊரடங்கு நீட்டிப் செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கவும் கற்றலை தொடரவும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளின் விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

ஆன்லைன் வகுப்புகள்..!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், பொறியியல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, தங்களுக்கான பாடங்களை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும், ஸ்பெஷல் ஆப் மூலமாகவும் படித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயற்பியல், கணிதம், கெமிக்கல் இன்ஜினியரிங், டிசைனிங், மெசர்மென்ட், மெஷின் இன்ஜினியரிங் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான காணொலி விரவுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
மற்ற பாடங்களுக்கான காணொலிகளும் பதிவேற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறதா..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்..!

இன்ஜினியரிங், தொழில்நுட்ப மாணவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட காணொலி விரிவுரைகளைப் பார்த்து படித்து கொள்ளலாம்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here