Sunday, May 5, 2024

“கூகிள் பே” செயலி இனி பணபரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்குமா?? நிர்வாகம் விளக்கம்!!

Must Read

சமீபத்தில் கூகிள் பே செயலியில் இனி பணப்பரிவர்த்தனை செய்ய கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதே போல் இந்தியாவில் அந்த செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செயல்படும் என்று வெளியான தகவலுக்கு தற்போது கூகிள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கூகிள் பே செயலி:

கடந்த சில ஆண்டுகளாக நாம் அனைவரும் நமது வேலைகளை சுலபமாக்கவும், நேரத்தை விரயமாக்காமல் உடனடியாக அனைத்து காரியங்களையும் செய்ய தொழில் நுட்பத்தின் உதவியினை நாடினோம். அதிலும் குறிப்பாக நம் வைத்திருக்கும் பணம் திருடு போய் விட கூடாது என்பதற்காக வங்கிகளில் பணத்தினை வரவு வைத்து அதனை எடுத்து பயன்படுத்தி வந்தோம். அடுத்த கட்ட முயற்சியாக, ஆன்லைன் வாயிலாக ஒரு இடத்தில் இருந்து கொண்டே ஒருவருக்கு பணம் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த முறையினை உலக அளவில் உள்ள பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் நாம் நம்பிக்கையோடு பயன்படுத்தும் ஒரு பண பரிவர்த்தனை செயலி என்றால் அது, “கூகிள் பே”. குறிப்பாக இந்த பொது முடக்க காலத்தில் அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக இருந்து வந்தது.

கூகிள் நிறுவனத்தின் பதில் அறிக்கை:

சமீபத்தில் “கூகிள் பே” செயலியில் பணப்பரிவர்த்தனை செய்ய இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தி வெளியானது. இந்த செயல்முறை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு தற்போது கூகிள் நிறுவனம் பதில் அளித்து ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதில் கூறப்பட்டுள்ளதாவது, “கூகிள் பே” செயலி புதிய பரிணாமத்துடன் செயல்பட உள்ளது. அது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு பணபரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -