Wednesday, May 22, 2024

அரியர் மாணவர்களுக்கு சலுகை – சென்னை பல்கலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Must Read

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்த அரியர் மாணவர்களுக்கு சலுகை ஒன்றினை வழங்கியுள்ளது சென்னை பல்கலைக்கழகம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பல்கலையின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

அரியர் தேர்வு விதி

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் உயர்கல்வி மாணவர்கள் படிப்பை தொடங்கிய நாளிலிருந்து படிப்பினை முடிக்கும் நாள் வரை ஏதேனும் ஒரு சில பாடங்களில் அரியர் வைத்திருந்தால், அதனை இரண்டு ஆண்டிற்குள் எழுதி முடித்து இருக்க வேண்டும் என்ற முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

arrear students
arrear students

அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்களுக்கு உரிய டிகிரி பட்டம் வழங்கப்படும். ஆகையால் கொடுத்துள்ள உரிய கால அவகாசத்திற்குள் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரியர் மாணவர்க்கு வாய்ப்பு

கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்த அரியர் மாணவர்களுக்கு நற்செய்தி ஒன்றினை சென்னை பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. அவை 2015 ஆம் ஆண்டு பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் படித்து முடித்தும் அரியர் வைத்துள்ள மாணவர்க்கு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கியுள்ளது சென்னை பல்கலைக்கழகம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

chennai university
chennai university

இவர்கள் அடுத்த ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுடன் சேர்ந்து எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 3 https://www.youtube.com/watch?v=rchL96FF00M  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -