Thursday, May 2, 2024

மூன்றே நாளில் 1,432 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

Must Read

தங்க விலை பண்டிகை காலத்தை ஒட்டி தொடர்ந்து 3 நாட்களாக குறைந்து மக்கள் மனதில் பால் வார்த்துள்ளது. இதன் காரணமாக சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அனைவரும் நகைகளை வாங்க கடைகளுக்கு படை எடுத்துள்ளனர்.

தங்க விலை உயர்வு:

கொரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் பலரது வாழ்வியல் சூழலை புரட்டி போட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு தங்களது குழந்தைகளுக்காகவும், எதிர்கால நலன் கருதியும் தங்க நகைகளை வாங்கி வைப்பது வழக்கமான ஒன்று. வெளிநாடுகளில் வெறும் முதலீடாக மட்டுமே பார்க்கப்படும் தங்கம் நம் நாட்டில் மட்டுமே மதிப்பிற்குரிய ஆபரணமாக பார்க்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க மார்ச் மாதத்தில் இருந்து தங்க விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்தது தான் இதற்கு காரணமாக அமைந்தது. தொடர்ச்சியாக தங்க விலை உயர்ந்ததால் மக்கள் இனி நகை வாங்க முடியாதோ? என்று கவலை அடைந்தனர். அதனை மெய்ப்பிக்கும் விதமாக தொடர்ந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வந்தது.

இன்றைய விலை நிலவரம்:

ஆனால், இரண்டு நாட்களாக தங்க விலை அதிரடியாக சரிந்தது. பண்டிகை காலத்தில் மக்கள் நகை வாங்குவது வழக்கம். தங்க விலையும் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாவது நாளாக இன்றும் தங்க விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.38,016 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.12 குறைந்து ரூ.4752 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் (24 கேரட்) ஒரு ஒரு கிராம் ரூ.5,132 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Why you should avoid investing based on gold-silver ratio

அதே போல் ஒரு சவரன் ரூ41,052 என்று விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் அதிகரித்து ரூ.67 ஆக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -