இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் – லிஸ்ட் இதோ!!

0

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து உலகமே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கொரோனா, நிலநடுக்கம், மழை என எண்ணற்ற இடர்களை நாம் சந்தித்து வருகிறோம். இப்பொழுது கொரோனா பிடியில் இருந்து படிப்படியாக மீண்டு இப்பொழுது ஓரளவிற்கு நாடே சகஜமாகி உள்ளது. மேலும் இந்த வருடத்தில் பல பிரபலங்களின் திருமணமும் நடந்தேறியது. தற்போது தீபாவளியை ஒட்டி தல தீபாவளியை கொண்டாட போகும் பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்

இந்த வருடத்தில் பல பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டாலும் அதையும் தாண்டி பல நமக்கு பிடித்த பல நடிகர், நடிகைகளின் திருமணமும் நடந்தேறியது. இப்பொழுது அவர்கள் இந்த தல தீபாவளியை கொண்டாட ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் மட்டுமல்ல அவர்களின் ரசிகர்கள் கூட ஆவலுடன் உள்ளனர். மேலும் இந்த வருடத்தில் யார் யார் தல தீபாவளி கொண்டாட போகிறார்கள் என்ற லிஸ்டும் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரபல நடிகரான சதிஷ்க்கு 2019 டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. சதிஷ்-சிந்து தம்பதிகள் தல தீபாவளியை கொண்டாட ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர். அடுத்து பிக் பாஸ் பிரபலமான மகத்- பிராச்சி திருமணமும் இந்த வருட பிப்ரவரியில் நடந்தேறியது. இந்த தம்பதிகளும் தல தீபாவளிக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் தமிழ் திரையுலகை கலக்கிவரும் பிரபல காமெடி நடிகரான யோகி பாபு – மஞ்சு பார்கவிக்கு இந்த வருட பிப்ரவரியில் திருமணம் நடந்தது. இவர்களும் தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாட வெயிட்டிங்கில் உள்ளனர். அடுத்ததாக தெலுங்கு திரையுலகை கலக்கி கொண்டிருக்கும் பாகுபலி புகழ் ராணாவுக்கும் இந்த வருடம் மே மாதம் திருமணம் நடந்தேறியது. இந்த காதல் ஜோடிகளும் தல தீபாவளிக்கு ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு இப்பொழுது தான் திருமணமும் நடந்து முடிந்தது. இந்நிலையில் ஹனிமூனுக்கு சென்ற ஜோடிகளும் தல தீபாவளியை கொண்டாட ஆவலுடன் உள்ளனர்.

பிக் பாஸ் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஆரவ். இவருக்கு இந்த வருட செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்த காதல் ஜோடிகளும் இந்த வருட தல தீபாவளியை கொண்டாட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here