Wednesday, May 15, 2024

கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறப்பு கிடையாது – சுகாதாரத்துறை அமைச்சர்!!

Must Read

நாடு முழுவதும் கொரோனா பரவல் கடந்த மார்ச் மாதம் முதல் மக்களை தாக்கி வந்தது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி இன்னும் கிடைக்காத நிலையில் தற்போது பள்ளிகளை திறப்பது அவசியம் இல்லை என்று டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் மூடல்:

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பரவல் இன்று வரை தாக்கம் குறைந்தபாடில்லை. ஆகையால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே மூடப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பாடங்களை படித்து வருகின்றனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

schools closed
schools closed

இதனால் எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் ஆன்லைனில் நடக்கும் வகுப்பைக்கூட கவனிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்கலாம் என்று முடிவு எடுத்தால் கொரோனா பரவல் அதிகமாகி கொண்டேதான் இருக்கிறது. ஆகையால் மாநில அரசுகள் பள்ளி திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகின்றன.

சுகாதார அமைச்சர் சத்யேந்தர்

இந்நிலையில் இன்னும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு நாடும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு தான் வருகின்றனர். ஆனால் கடைசி முடிவில் தோல்வியை தழுவி வருகிறது. தற்போது இந்தியாவின் சீரம் நிறுவனம் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை தயாரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

satyendra jein met news reporter
satyendra jein met news reporter

அவை பயன்பாட்டுக்கு வர ஓராண்டுக்கு மேல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராத நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பது அவசியம் இல்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -